தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கும்பகோணம் இசுலாமிக் சோசியல் வெல்பேர் அசோசியேசன் இணைந்து ‘வெற்றிப் படிக்கட்டு-2024’ கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார், வணிக ஆலோசகர் அலாவுதீன் ஆகியோர் உரையாற்றினர். பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.