அறந்தாங்கி, அக்.29 - பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ‘விபத்தில்லா தீபாவளி’ துண்டு பிரசுரங்கள் விநியோக முகாம் நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடை வீதியில் நடைபெற்ற முகாமிற்கு கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் வீ.பால முருகன் தலைமை வகித்தார். அறந்தாங்கி காவல் ஆய்வாளர் எஸ்.கருணாகரன், துண்டு பிரசுரங்கள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். அறந்தாங்கி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் எஸ்.கவிதா, கற்பகா ஜுவல்லரி அய்யாக்கண்ணு, அறந்தாங்கி வர்த்தக சங்க நிர்வாகிகள் ஜாஹிர் உசைன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவியாக, தடுப்புத் தட்டிகளை சரி செய்ததோடு, விபத்தி இல்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு வாச கங்கள் அடங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து அறந்தாங்கி - பேரா வூரணி சாலையிலும் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.