உதகை, மே 12- உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், நடைபெற்ற டெர்பி குதிரைப்பந்தயத்தில் ராயல் டிபண்டர் குதிரை வெற்றி பெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் மே மாதத்தில் பல்வேறு கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோடை விழாவை ஒட்டி மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரை பந்தயம் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனியன்று 7 போட்டிகள் நடைபெற்றன. மேலும், முக்கிய பந்த யமான டெர்பி பந்தயத்தில், 1600 மீட்டர் இலக்கை நோக்கி 11 குதிரைகள் ஓடின. இதில், ராயல் டிபண்டர் குதிரை, 1:41.89 என்ற நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இரண் டாவதாக திஸ் ஈஷ் கோல்டு குதிரை, மூன்றாவதாக கிரே விண்ட் ஆகிய குதிரைகள் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், முதலி டத்திற்கான பரிசுத்தொகை ரூ.77 லட்சத்தில் குதிரையின் உரி மையாளருக்கு கோப்பை மற்றும் ரூ.38 லட்சத்து 11 ஆயி ரத்து 500, பயிற்சியாளருக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரம், ஜாக்கிக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குதிரைக்கு ரூ.14 லட்சத்து 61 ஆயி ரத்து 75, மூன்றாம் இடம் பிடித்த குதிரைக்கு ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பிடித்த குதிரைக்கு ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்பட்டன.