கும்பகோணம், ஜூன் 7- கு
ம்பகோணம் அருகே உள்ள பூம்பு கார்-கல்லணை சாலையில் பாபுராஜபுரம் ஊராட்சி புளியஞ்சேரி அருகே சாலை மூடப் பட்டு அரை கிலோ மீட்டர் தள்ளி புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் மக்கள் ஊரை விட்டு வெளியே சென்று தேவையில்லாத தூரத்தில் திரும்பும் நிலையும் உள்ளது. எனவே, பூம்புகார்_கல்லணை சாலை மூடப்பட்டுள்ள அதே இடத்தில் பழைய வழியிலேயே பாதையை திறப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிடவும் தமிழ் நாடு அரசின் கவனத்தை ஈர்த்திடவும் ஆலோ சனைக் கூட்டம் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்டுப்பு கூட்டம் சுவாமிமலை யில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத் துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் தலை மை வகித்தார். கோதண்டபாணி சண்முகம் மாணிக்கம், புர்கான், ரங்கராஜன், ராம மூர்த்தி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஓய்வு பெற்ற கிராம அதி காரி கோதண்டபாணி தலைமையில் 20 பேர் கொண்ட பூம்புகார்-கல்லணை சாலை தடை நீக்கும் குழு தேர்வு செய்யப்பட்டு, விரைவில் தஞ்சை மாவட்ட புதிய ஆட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கு வது எனவும் அரசின் கவனத்தை ஈர்க்க ஜூன் மாதம் 4-வது வாரத்தில் அனைத்து கிராம பொது மக்களை திரட்டி பெருந்திரள் ஆர்ப் பாட்டம் செய்வது எனவும் முடிவு செய்யப் பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில், தமுஎகச மாவட்டத் தலைவர் ச.ஜீவபாரதி, சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் கண்ணன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் நாகராஜன், ஓய்வு பெற்ற அரசு அலு வலர்கள் ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்கத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.