districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, அக்.12- சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும், இரவு நேரங்களில் வீடு புகுந்து கைது செய்த காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி தலைமை வகித்தார். சிஐடியு இணைப்பு சங்கத் தலைவர்கள், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால், விவசாயிகள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் பேசினர்.  சிஐடியு திருவாருர் மாவட்டத் தலைவர் எம்.கே.என்.ஹனிபா சிறப்புரையாற்றினார்.