districts

img

விலைவாசி உயர்வைக் கண்டித்து சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக். 30- நாகர்கோவிலில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் சட்டி ஏந்தி நூதன பண்டிகை பஜார் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மேரி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் என்.உஷா பாசி, மாநில குழு உறுப்பினர் ஆர். லீமா றோஸ், மாவட்ட செயலாளர் எம்.ரெகுபதி, பொருளார் சுதாபாய் ஆகியோர் போரட்டத்தை விளக்கி பேசினர். அப்போது அவர்கள், தீபாவளி பண்டிகை வரு வதை முன்னிட்டு விலை வாசி அனைத்தும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி ஏழை மக்களை காக்க வேண்டும் உள்ளிட்ட  கோஷங்கள் எழுப்பினர்.