districts

img

பெருகமணி ஊராட்சியில் கனிமவள நிதி ரூ.1.37 கோடி கையாடல் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.8 - திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத் துக்குட்பட்ட பெருகமணி ஊராட்சியில் கடந்த  8 ஆண்டுகளாக கனிமவள நிதி ரூ.1 கோடியே 37 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றாமல் தேவையின்றி, தரமற்ற பணிகள் மூலம் நடை பெற்றுள்ள முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர  வேண்டும். தலைவர் மற்றும் துணைத் தலை வரின் மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியக் குழு  சார்பில் வெள்ளியன்று ஊராட்சி அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலா ளர் நட்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கார்த்திகேயன், விவசாயத் தொழிலாளர்  சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை, துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். சிபிஎம் கமிட்டி உறுப்பினர் முருகன்  நன்றி கூறினார்.