தஞ்சாவூர், செப்.17 - மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர் களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி மாதந்தோறும் சரியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாய்சித்ரா தலைமையில் ஊழியர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 351 பேர் பணிபுரிந்து வரு கிறோம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களின் கீழ் பணிபுரியும் 42 பெண் சுகா தாரத் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை மாதந்தோறும் சரியாக வந்து விடுகிறது. கிராமப்புறங்களில் உள்ள 309 பெண் சுகா தாரத் தன்னார்வலர்களுக்கு 2 மாத இடை வெளிக்கு பிறகே ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது. இந்தப் பணியில் கணவனால் கை விடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊக்கத்தொகை தாமதத்தால் சிரமப்பட்டு வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை நேரத்தை வரையறை செய்து தர வேண்டும். ஊக்கத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தாமதமின்றி மாதந்தோறும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது சங்க நிர்வாகிகள் பொருளா ளர் தமிழ் இலக்கியா மற்றும் தேவி, சித்ரா, வெண்ணிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.