திருச்சிராப்பள்ளி, ஜன.28 - தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு பணியாளர்கள் சங்க இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி யில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஸ்ரீதர் பிரின்ஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பூமிநாத பாண்டியன், மாநிலப் பொருளாளர் லியோ முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு மருத்துவ பணி யாளர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சாந்தி, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் பால்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்பு செயலாளர்கள் கோமதி, தாமரைச்செல்வி, மாநில துணை செயலாளர்கள் ரேவதி, ஆரோக்கிய ஆல்பர்ட், பிரபு, பாலசுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பி.எச்சி - ஐசிடிசி பணியா ளர்களுக்கு 2021 முதல் 30 சதவீதம் சிறப்பு போனஸ் ஊதிய உயர்வு என்எச்எம் மூலம் பெறப்பட்டு, டிஏஎன்எஸ்ஏசிஎஸ் வழங்க வேண்டும். 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை டிஏஎன்எஸ்ஏசிஎஸ் வழங்க வேண்டும். குழு காப்பீடு வழங்க வேண்டும். இஎஸ்ஐ, இபிஎப், டி.ஏ. வழங்க வேண்டும். டிஏஎன்எஸ்ஏசிஎஸ் பணியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வழிவகை செய்யக் கோரி, தமிழக அரசையும் டிஏஎன்எஸ்ஏசிஎஸ் நிர்வாகத்தையும் வலி யுறுத்துவது, டிஏஎன்எஸ்ஏசிஎஸ் மற்றும் என்எச்எம் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் ஏப்ரல் 2025-இல் காலவரையற்ற போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் முத்துச் செல்வன், தங்கராஜ், ஸ்ரீதர், சாரதி, தமிழ்மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கி னர். நிகழ்ச்சிகளை மாநில துணைத்தலைவர் அய்யனார் தொகுத்து வழங்கினார். முன்ன தாக திருச்சி சலோமி வரவேற்றார். திருச்சி அம்பிகா நன்றி கூறினார்.