districts

img

சாயக் கழிவுகளால் சாக்கடையாக மாறும் காவிரி

கரூர் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு

கரூர், ஜூலை 2 - தமிழ்நாட்டில் காவிரி ஆறு  சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படு வது மட்டுமின்றி, வீராணம் ஏரி மூலம் சென்னைக்கும் குடிநீர் கொண்டு செல்லும் மிகவும் முக்கிய  நதியாக திகழ்கிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராய புரம் ஒன்றியம், மாயனூரில் காவிரி ஆற்றில் கதவணை அமைத்து  தண்ணீர் தேக்கி வைக்கப்படு கிறது. இதனால் மாயனூரைச் சுற்றி உள்ள கிராமங்கள் மட்டு மின்றி, திருச்சி மாவட்டம், காட்டுப் புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கு கிணற்றில் நீர் மட்டம்  உயர்கிறது. மேலும் பொதுமக்க ளின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில்  உள்ள காவிரி ஆற்றில் இருந்து  திண்டுக்கல், இராமநாதபுரம், சிவ கங்கை, மணப்பாறை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயி களின் உயிர் நாடியாகவும் இருந்து வரும் காவிரி ஆறு, தற்போது  சாயக்கழிவுகள் நிரம்பிய சாக்கடை யாக மாறிக் கொண்டிருக்கிறது.  மாயனூர் கதவணைக்கு கடந்த 25.6.2024 முதல் காவிரி யில் தண்ணீர் பச்சை நிறத்தில்  வருகிறது. இங்கு தேக்கப்பட்டுள்ள  நீர், கழிவு நீர் போல காட்சிய ளிக்கிறது. திருப்பூர் சாயக்கழிவை தேக்கி வைத்திருக்கும் ஒரத்து பாளையம் அணையில் இருந்தும், திருப்பூரில் இருந்து வரும் நொய் யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் கரூர்  மாவட்டம், நொய்யல் என்ற இடத்தி லும் காவிரியில் கலக்கிறது.  மேலும் ஈரோடு, பள்ளிபாளை யம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நூற்றுக் கும் மேற்பட்ட சாயப் பட்டறை களில் இருந்து திறந்துவிடும் சாயக் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதால் தண்ணீர் நுரை பொங்கி பச்சை நிறத்தில் வரு கிறது. காவிரி நீரை குடிப்பதற்கு பயன்படுத்தும் கரூர் மாவட்ட மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  தோல் சம்பந்தமான நோய்களும்,  கேன்சர் போன்ற கொடிய நோய் களும் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதுபோன்று தொடர்ந்து சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து வந்தால், டெல்டா மாவட் டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். காவிரி நீர் வீரா ணம் ஏரியில் இருந்து சென்னைக் கும், இராமநாதபுரம் உள்ளிட்ட  தமிழகத்தின் பாதி மாவட்டங்களில் குடிநீருக்கு, காவிரி ஆற்றின் தண்ணீரை நம்பித்தான் பொது மக்கள், விவசாயிகள் என அனை வரும் வாழ்ந்து வருகிறோம். காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர்  கலப்பதை தடுக்க, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட ஆட்சியர் கள் துரிதமாக செயல்பட்டு காவிரி ஆற்றையும், அந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் கொஞ்சம், கொஞ்சமாக பாலை வனமாக மாறுவதை தமிழக அரசு  தடுத்து நிறுத்த போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் மற்றும் விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக கரூர்  மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேலி டம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, விவசா யிகள் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாநக ரச் செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்டப் பொருளாளர் சுப்பிர மணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

;