மாதர், வாலிபர், எல்ஐசி, வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.26 - கொல்கத்தாவில் முதுநிலை பெண் மருத்துவப் பயிற்சியாளரை பாலியல் வன்கொலை செய்தவர்கள், கிருஷ்ண கிரியில் தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கள், திருச்சியில் 8 வயது சிறுமியை இரவு முழுவதும் பாலியல் துன்புறுத்தி யவர்கள் என நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன் முறை அரங்கேறி வருகிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கக் கோரி மாதர், வாலிபர், எல்.ஐ.சி மற்றும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாதர் சங்க ஸ்ரீரங்கம் பகுதிச் செய லாளர் கீதா, வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சந்துரு ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் பாலபாரதி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, வழக்கறிஞர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜார்ஜ் கெவின், எல்.ஐ.சி சங்க மாவட்டச் செயலாளர் ஜோன்ஸ் ஆகியோர் பேசினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள் நன்றி கூறினார்.