மயிலாடுதுறை, அக்.03- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியம், சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றின் குடியிருப்பை சுற்றி வேலி அமைத்து சாதி ஆதிக்கச் சக்தி யினர் அராஜகத்தில் ஈடுபட்டுள் ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் சரஸ்வதிவிளாகம் கிராமம், ராஜன் வாய்க்கால் தெருவில் வசிப்பவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்த மகாலிங் கம் என்பவரது மகன்கள் மணிகண் டன், கலியபெருமாள் கடந்த பல ஆண்டுகளாக அதேப்பகுதியில் குடும்பத்தினரோடு, மனைவி, பிள்ளைகளோடு வசித்து வரு கின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக அதேப்பகுதியில் விவசாய நிலங்கள் வைத்துள்ள ஆயங்குடிபள்ளம் பகுதி யை சேர்ந்த வளர்மதி என்பவரிடம் அடிமைப்போன்று கூலி வேலை செய்துள்ளனர்.இதனிடையே மகா லிங்கம் குடும்பத்தினர் மீண்டு வந்து வேறு வேலைகளுக்கு சென்று வரு கின்றனர்.இதைப்பொறுக்காத வளர்மதி மற்றும் அவரது உறவி னர்கள் ராமு மகன் ரவி, செல்லப் பன் மகன்கள் செந்தில், சங்கர் ஆகியோர் செப்டம்பர் 27 அன்று மகா லிங்கம் வீட்டிற்கு வந்து பற பய லுங்களே உங்களுக்கு அவ்வளவு திமிராடா? எங்கக்கிட்ட கொத்தடிமை யாக இருந்துட்டு, இப்போ வேற வேலைக்கா போறீங்க? நீங்க எப்படி நடமாடுறீங்கனு பாக்குறோம் என மிக கேவலமாக சாதியை சொல்லி ஆபாசமாக திட்டி வீட்டை சுற்றி கம்பி வேலி வைத்து அடைத்துள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மே லாக பொதுப்பாதையாக மக்கள் பயன்படுத்தியதை அடிமைப் படுத்தும் நோக்கில் சாதி ஆதிக்க வெறியோடு அடைத்துவிட்டதால் நடந்துசெல்ல வழியின்றி மகாலிங்கம் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:. மகாலிங்கம் வீட்டை சுற்றி கருங்கல் போஸ்ட் மற்றும் கம்பி வேலி கொண்டு அடைத்து அவர்களை வெளியே வரவிடாமல் அடைத்துள்ள னர். ஆனால் அதே பாதையில் ஆடு, மாடு, நாய்கள் நடப்பதற்கு வழி கொடுக்கும் இவர்கள் தலித் சமூ கத்தை சார்ந்த மனிதர்கள் நடக்க வழி கொடுக்க மறுக்கிறார்கள்.
இவர்கள் மீது சட்ட ரீதியான புகார்கள் கொடுத்தும் இதுநாள்வரை பதிக் கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் நடக்க வழிக்கான பாதை எதுவும் அரசால் உத்தரவாதப்படுத்த முடிய வில்லை, பள்ளி செல்லும் குழந்தை கள் யாரும் தினசரி பள்ளிக்குச் செல்லும் சூழல என்பது இதனால் பாதிப்படைகிறது. எனவே நடவ டிக்கை எடுக்க தவறிய கொள்ளிடம் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வா கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தமிழ்நாடு தீண்டமை ஒழுப்பு முன்ணணி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு பாதிக் கப்பட்ட குடும்பங்கள் நடப்பதற்கு தேவையான வழிப்பாதை அமைத்துத தர வேண்டும். இல்லாவிடில் சட்ட விரோத வேலியை அகற்றும் உக்கிர மான போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர். .இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர லிங்கம் ,ஒன்றியக்குழு உறுப்பினர் நேதாஜி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை நடவ டிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.