districts

img

சிபிஎம் மூத்த தோழர் எஸ்.ரெங்கசாமி காலமானார்

திருவாரூர், அக்.25 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம், திருக்கொட்டாரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் திருக்கொட்டாரம் அறுவடைக் கூலி போராட்டத்தில் சிறை சென்ற கட்சியின் மூத்த தோழருமான எஸ்.ரெங்கசாமி வியாழனன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. திருக்கொட்டாரம் கீழத்தெரு இல்லத்தில் அஞ்சலிக்காக தோழரின் உடல் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாக. ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், டி.வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். முன்னதாக தோழரின் உடலுக்கு மலர் மாலை வைத்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி வெள்ளியன்று மாலை நடைபெற்றது.