districts

img

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் நூதனப் போராட்டம்

திருத்துறைப்பூண்டி ,செப்.5- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியத்தில் மேலக் கொருக்கை கடைவீதி சாலை ஒரமாக 150க்கு மேற்பட்டவர்கள் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி வாயில் துணி கட்டி பாடையை சுற்றி அழுது ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.       ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ்  தலைமை வகித்தார். இந்நிகழ் வில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியின் கிளை செயலாளர்கள் விவ சாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உரை யாற்றினர். அப்போது தொடர்ந்து மக்க ளின் அடிப்படை தேவைகளான சாலை, மின்விளக்கு, குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள், அங்கன்வாடி மையங்கள், அனைவ ருக்கும் 100 நாள் பணிகள் முழுமை யான ஊதியத்தோடு கொடுக்க வேண்டும், குளம், குட்டை, கிணறு, ஆகியவை தூர்வாரி சீரமைத்து மக்கள்  பயன்பாட்டிற்கு விட வேண்டும்  போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியாகவே போராடுகிறோம். தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி மக்களின் அடிப்ப டைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறினர். பிறகு வட்டாட்சியர், காவல் ஆய்வா ளர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் குறுகிய காலத்தில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக எழுத்து பூர்வ மாக உறுதி அளித்துள்ளதால் தற்காலி கமாகப் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது.