districts

img

முரசொலிக்கு ஆதரவாக சிபிஎம் பிரச்சாரம்

திருவள்ளூர், ஏப்.15- திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டி பேரூ ராட்சி முழுவதும் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.  கும்மிடிப்பூண்டி  நட்ராஜ் பிரிண்டிங் பிரஸ் அருகிலிருந்து துவக்கிய பிரச்சாரம் மாபொசி நகர், வெட்டுக் காலனி, தபால் தெரு, காட்டுக்கொள்ளைத் தெரு,  கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை,  கோட்டக் கரை, பஜார் உள்ளிட்ட 15 வார்டுகளிலும்  பிரச்சாரம் மேற்கொண்ட னர். சிபிஎம் மூத்த உறுப்பினர் சி.ஆறுமுகம் தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், ஜோசப், சிவகுமார், குப்பன், நகர செயலாளர் வி.ஆர்.லட்சுமணன், விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி சிறுபுழல்பேட்டை ராணி, காங்கிரஸ்  நிர்வாகிகள் வழக்கறிஞர் சம்பத், சிவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.