அவிநாசி டிச.12 பாஜகவை சேர்ந்த புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கிராமசபையில் பங்கேற்க பணம், உணவு பொட்டலங்கள் கொடுத்து கூட்டத்தை காட்டியுள்ளதாக மார்க் சிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பொன்ராமபுரம் பகுதி யில், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்திற்கு காவலாளி நியமித்த வகையில் மாதம் தோறும் ரூ.9,360 ஊராட்சி மன்றத் தலைவர் முறைகேடாக எடுத்துள்ளார். இதற்கு உறு துணையாக அவரது கணவரும் இருந்து வரு கிறார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அதி காரி, அமைச்சர் உள்ளிட்டோர்களிடம் தொடர்ச்சியாக மனு அளித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, சிறப்புக் குழு தணிக்கை செய்த அடிப்படையில், ரூபாய் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 640 எடுத்துள் ளது தெரியவந்தது. மேலும் நவம்பர் 1 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மக்களுக்கு முறையாக அறி விப்பு வெளியிடவில்லை, கிராமசபை கூட்டத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தி லேயே நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த கிராம சபை கூட்டத்தை, பாஜகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறி வித்துவிட்டு சென்று விட்டார். கூட்டத் திற்கு வந்த அதிகாரிகள் வேறு வழியில்லா மல், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரி டம் கலந்து ஆலோசித்து சென்றனர். ஊராட்சித் தலைவரின் கணவர் ஊழல் புரிப வராகவும், ஊராட்சியில் ஆதிக்கம் செலுத்து பவராகவும் உள்ளார் என தொடர்ந்து குற்றச் சாட்டு எழுந்து வருகிறது. இதன்தொடர்ச்சி யாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுப்பாளையம் ஊராட்சி கிளைகள் சார் பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராம சபை கூட்டம், பள்ளி நடைபெரும் நாளில், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடத்தியுள்ள னர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் 100 நாள் வேலை திட்ட நபர்களுக்கு, பாஜக ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியாவின் கணவர், நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் பணமும், உணவு பொட் டலமும் வழங்கி ஆட்களை அழைத்து வந்து, முறைகேடாக கிராமசபை கூட்டத்தை நடத்தி யுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒரு தரப்பினருக்கு அமர இருக்கை போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதுப்பாளையம் ஊராட்சி மன்றத்தின் முறைகேடுகளை அம்பலப்ப டுத்தி, கட்சியின் கிளைச் செயலாளர்கள் பால சுப்பிரமணியம், குமரவேல், ஹனிபா, முன் னாள் செயலாளர்கள் ஈஸ்வரன், முருகேஷ், கதிர்வேல், மற்றும் செல்வம், செல்வகுமார், திரிகாமு உள்ளிட்டோர் மனு அளித்திருந்த னர்.