அறந்தாங்கி, ஜூலை 7 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் ஹஜ் பெருநாளையொட்டி, மேல்மங்களம் கிரா மத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக முதலாம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங் களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. நடு குதிரை, சின்ன குதிரை, உள்ளூர் குதிரை மற்றும் பூஞ்சிட்டு மாடு என நான்கு பிரிவு களாக இந்த போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 57-க்கும் மேற்பட்ட குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமை யாளர்கள் மற்றும் குதிரையின் உரிமையா ளர்களுக்கு ரூ.1.21 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கண்டு ரசித்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.