districts

img

திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பேரணி - போராட்டம்

நூற்றுக்கணக்கானோர் ஆட்சியரிடம் மனு திருச்சிராப்பள்ளி, செப்.20 - திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் உள்ள பழைய பேப் பர்கள், இரும்பு பொருட்களை ஏற்றி- இறக்கும் பணியில், கடந்த 25 ஆண்டுகள் முதல் 10 ஆண்டு கள் வரை சுமை தூக்கும் தொழி லாளர்கள் 45 பேர் தனித்தனி முத லாளிகளிடம் 8-க்கும் மேற்பட்ட கடைகளில் வேலை பார்த்து வரு கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வும், ஒவ்வொரு ஆண்டு போனஸ் தொ கையும் மேற்படி அந்தந்த முத லாளிகளிடம் பேசி கடந்த 25  ஆண்டுகளாக பெற்று வரு கிறார்கள். இந்நிலையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த 10 தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்காமல், கடந்த செப். 17 அன்று வேலை செய்து வந்த வர்களை, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு எனக்கூறி காவல்துறை உதவியோடு வெளியேற்றி விட்ட னர். மேலும், திடீரென பீகார் மாநில தொழிலாளர்கள் 10 பேரை  கொண்டு வந்து வேலை செய்து வருகிறார்கள். நீதிமன்றம் அந்த கடையில் வேலை பார்த்த தொழி லாளர்கள் வேலை செய்யக் கூடாது என்று எந்தவித உத்தர வும் போடவில்லை.  எனவே இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மேற்படி கடையில் சுமை தூக்கும்  தொழிலாளிகளாக வேலை  பார்த்து வந்த 10 தொழிலா ளர்களுக்கு மீண்டும் வேலை பெற்றுத் தர வலியுறுத்தி, சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம்  சார்பில் வெள்ளியன்று திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வெஸ்ட்ரி பள்ளி ரவுண் டானாவில் இருந்து பேரணியாக வந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், சிபிஎம்  மாநகர் மாவட்டச் செயலாளர்  ராஜா ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  போராட்டத்தில் நிர்வாகிகள்  ரமேஷ், மூர்த்தி, செந்தில், சந்திரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் தொழிலாளர் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு  கொடுத்தனர்.