இடதுசாரி பேரியக்கத்தின் பெருந் தலைவர்களில் ஒருவரான தோழர் ப.ஜீவானந்தத்தின் 117வது பிறந்த நாளான புதனன்று (ஆக. 21) தாம்பரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, மாவட்டக்குழு உறுப்பினர் ஹெலன் தேவகிருபை, மூத்த தலைவர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கு.ராஜன்மணி, கோவிந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.