districts

img

தோழர் டி.பி.ராமச்சந்திரன் நினைவு தின வீரவணக்கம்

திருவாரூர், ஜன.29 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத் தில் உழைப்பாளி மக்களின் தோழராக, தலை வராக கட்சி நடத்திய பல்வேறு போராட்டங் களில் களம் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் வட்டச் செயலா ளர் தோழர் டி.பி.ராமச்சந்திரன் 31 ஆம் ஆண்டு  நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப் பட்டது. திருமீயச்சூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம்  செலுத்திய நிகழ்ச்சிக்கு, திரு மீயச்சூர் கிளைச் செயலாளர்கள் ராஜகுரு, செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ.முகமது உதுமான், பேரளம் நகரச் செயலாளர் ஜி. செல்வம் மற்றும் ஒன்றியம், நகர குழு, கிளை உறுப்பினர்கள் தோழர் டி.பி.ராமச் சந்திரன் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.