திருத்துறைபூண்டி, பிப்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி்ன் திருத்துறைபூண்டி தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் டி. ஜீவானந்தம் உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 64. செய்தி அறிந்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன். மாவட்டச் செயற்குழு உறுப்பி்னர் சி. ஜோதிபாசு ஒன்றிய செயலாளர் டி.வி.மார்க்ஸ் ஆகியோர் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள தோழர் ஜீவானந்தம் இல்லத்திற்குச் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் ஜீவானந்தம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்சிப்பணிகளில் தீவிரமாக உணர்வுபூர்வமாக உழைத்தவர். அவருக்கு, மனைவி மற்றும் மூன்று மகன்களும் உள்ளனர்.