திருவாரூர், ஜன.12 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டம் குடவாசல் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாவட்டக் குழு உறுப்பினரு மான ஏ.சுப்பரவேல் (64) உடல் நலக்குறை வால் சனிக்கிழமை காலமானார். குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் ஊராட்சி, எலந்தவனஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தோழரின் மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சிபிஐ தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாநில விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலா மணி மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தி னர் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.