districts

img

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டி

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன், ஜூன் 7 வெள்ளிக்கிழமையன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனுள்ளனர்.