திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை செவ்வாயன்று அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். கைத்தறித் துறை உதவி இயக்குநர் ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு ரூ.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.