அறந்தாங்கி, டிச.26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஜேசிஜ முன்னாள் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்து அரசர் ஆலயத்தின் தந்தை தஞ்சை டோமி மற்றும் சிறப்பு விருந்தினர் ஜேசிஜ வெங்கட்குமார், கிறிஸ்து அரசர் ஆலயத்தின் துணைத் தலைவர் மாணிக்கம், பங்குமன்ற உறுப்பினர் பிலிப், அந்தோணியார் ஊர் தலைவர் கென்னடி, இளைஞர் தலைவர் ஆண்டோ பிரவீன், ஜேசிஐ அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் 2025 தலைவர் மணி, செயலாளர் திவாகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது. திட்ட இயக்குநராக ஜேசி ஆனி செயல்பட்டார். ஜேசிஐ அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் செயலாளர் திவாகர் நன்றி கூறினார்.