districts

img

மின் இணைப்பு பெறுவதற்கு விதிக்கப்படும் கடும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் எலெக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப்.4 - தமிழ்நாடு எலெக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறன்று நடை பெற்றது.  கூட்டத்திற்கு மாநில அமைப்பு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.  எலெக்ட்ரிக்கல் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். எலெக் ட்ரிக் மற்றும் உணவு பொருட்கள் மீதான  ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.  மின் இணைப்பு பெறுவதற்கு விதிக்கப் படும் கடும் நிபந்தனைகளை தளர்த்தி எளி மைப்படுத்த வேண்டும். ரூ.27 ஆயிரம் கோடி  அளவிற்கு உயர்த்த உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழ்நாடு எலெக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்க  முதல் மாநில மாநாட்டை வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடத்துவது என்பன  உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  கூட்டத்தில் கரூர் கந்தசாமி, கன்னியா குமரி குமார் உள்பட மாநிலக் குழு நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை சம்பத்ராவ் வரவேற்றார். திருச்சி  செல்வராஜ் நன்றி கூறினார்.

;