மயிலாடுதுறை, ஏப்.17 - மயிலாடுதுறை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா புதனன்று மாலை பிரச்சாரத்தை நிறைவு செய்தார். ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சியி னர் மத்தியில் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாள ருமான நிவேதா.எம்.முருகன், காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.