districts

காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

அரியலூர், ஜூன் 21-

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாண வர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை  உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இத்திட்டத்தின் மூலம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு  உட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன்குடி யிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு) மற்றும் (வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம் ஆகிய  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஜெயங் கொண்டம் ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 464 மாணவ-மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டு வரு கிறது.

    ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாண வர்களுக்கு உணவுகள் வழங்கப்படுவதை புதனன்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மேலும்,  மாணவர்களுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாக வும், சரியான நேரத்திலும் வழங்க அறிவுறுத்தினார்