districts

திருச்சி முக்கிய செய்திகள்

பாலைவனநாதர் கோயிலில் தேரோட்டம்

பாபநாசம், ஏப்.23 -  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறை அருள்மிகு தவள வெண்ணகையாள் உட னுறை பாலைவனநாதர் திருக்கோயில் சித்திரை மாத பவுர்ணமி பிர மோற்சத்தை யொட்டி ஏப்.14 அன்று கொடி யேற்றப்பட்டது. விழா வின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. விசேஷ அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் எழுந் தருள, பக்தர்கள் தேரை  வடம் பிடித்து இழுத்த னர். இதில் கோவில் செயல் அலுவலர் விக் னேஷ் உட்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் வாலிபர் கைது

கும்பகோணம், ஏப்.23- கும்பகோணத்தில் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன் கொடுமை செய்த வாலிபர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதி யைச் சேர்ந்த பிளஸ் 2  மாணவி, கடந்த ஏப்.18  அன்று வீட்டில் இருந்து கடைக்குச் சென்று வரு வதாக கூறி சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு  திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கும்பகோ ணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தனர்.  அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்த னர். இந்நிலையில் மாண வியும், கும்பகோணம் துக்கம்பாளையத் திரு யானையடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்பவரும் காத லித்து வந்துள்ளனர். இத னால் ரஞ்சித்குமார் மாண வியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆன்-லைன் முதலீடு:  ரூ.79 லட்சம் மோசடி 

திருச்சிராப்பள்ளி, ஏப்.23- திருச்சி மாவட்டம்  ஸ்ரீரங்கம் அம்மாமண்ட பம் சாலையைச் சேர்ந்த வர் சந்திரசேகரன் (74).  இவர் ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர்.  சம்பவத்தன்று இவரு டைய செல்போனில் மர்ம  நபர் ஒருவர் பேசி ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் முதலீடு செய் தால் அதிக லாபம் கிடைக் கும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி யுள்ளார்.  இதை நம்பிய சந்திர சேகரன் அந்த மர்ம நப ரின் செல்போன் எண் ணுக்கு ரூ.79 லட்சத்து 50  ஆயிரம் பணத்தை போட்டுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடிய வில்லை. பிறகு, தான் பணம் கொடுத்து ஏமாந் தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சந்திரசேகரன்  சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீ சார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வரு கின்றனர்.

ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை: சாலை மறியல்

அரியலூர், ஏப்.23 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த மருதூர் ஊராட்சிக்குட்பட்ட காலனி தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குடிநீர்  வழங்காததை கண்டித்து, மருதூர் சாலை யில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த குவாகம் போலீசார், ஊராட்சித் தலைவர் ஆகியோர்  போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மதவெறுப்பு பிரச்சாரம் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்

பாபநாசம், ஏப்.23- இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு செயல்பட்டு, மதவெறுப்பு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய  மக்கள் கட்சியின் மாநிலத் தலை வர் பேராசிரியர் எம்.எச்.ஜவா ஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பு  மிக்க பதவியின் கண்ணியத்தை யும், சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அதில், “அவர்கள் (காங்கி ரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில், முஸ்லிம் களுக்கு முதல் உரிமை உண்டு  என்று சொன்னார்கள். இதன்  பொருள் அவர்கள் இந்தச் செல் வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல் காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார் கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பா தித்ததை ஊடுருவியவர் களுக்குத் தரப் போகிறீர்களா...? மன்மோகன் சிங் தலைமையி லான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு  என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை “என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின்  மாங்கல்யத்தைகூட விட்டு வைக் காது” என்றெல்லாம் ஒரு நாட்டின்  பிரதமர் பேசியிருப்பது இந்திய  நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்து உள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி  செய்த பிரதமர்கள் யாருமே  இது போன்ற தரங்கெட்ட செயல் பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது  பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்க ளைக் கவரத் தக்கச் சாதனை களைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  நாடு முழுவதும் இந்தியா கூட்ட ணிக்கு ஆதரவான அலை வீசுகிற  நிலையில், பாஜகவின் பிரதமர்  வேட்பாளர் மட்டமான வெறுப்புப்  பரப்புரையாளராக மாறியுள்ளார்.   குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது, அவரது உள்ளத் தில் உறைந்திருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும், கலவர  வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் குறையவில்லை என்பதை  அவரது இந்தப் பரப்புரை வெளிப் படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை களின் அடிப்படையில், மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரத மராக இவர் தேர்தல் நடத்தை  விதிமுறையையும் பின்பற்ற வில்லை.  நாட்டின் இறை யாண்மை மற்றும் அரசியல் சாச னத்தின் சாராம்சத்தையும் மதிக்க வில்லை.  ‘ஒருபோதும் சிறுபான்மை யினருக்கு எதிராக நாங்கள் இல்லை’ என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்ட மாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக் கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.  பிரதமர் பதவிக்கான கண்ணி யத்தை சீர்குலைத்துள்ள பிரதமர்  மோடிக்கு மனிதநேய மக்கள்  கட்சி சார்பில் கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறோம். அவர்  மீது இந்தியத் தேர்தல் ஆணையம்  கடும் நடவடிக்கை எடுத்து, தனது  நடுநிலையை நிரூபிக்க வேண்டும்  என்றும் கேட்டுக் கொள்கிறோம்.  இதை இந்தியத் தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து  போனால், அதன் நம்பகத்தன்மை  உலக அரங்கில் கேள்விக்குறி யாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மமக வலி யுறுத்துகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் நடவு செய்த  மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகும் நிலை

திருச்சிராப்பள்ளி, ஏப்.23 - திருச்சி மாநகராட்சியில் நட்டு வைத்த மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவை முற்றிலும் காயும் முன்பு காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் அடர்வன காடுகள் வளர்ப்புத் திட்டம், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாநகரப் பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. திருச்சி நீதிமன்றம் அருகில் மாணவர் சாலை, கண்டோன்மென்ட் பகுதியில் அனைத்து சாலைகள், காஜாமலை அண்ணா விளையாட்டரங்கை சுற்றியுள்ள சாலை, புதுக்கோட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளன. ஆனால் கோடை காலத்தையொட்டி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தடையேற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர்கள் மூலமாகவும், ஆங்காங்கே போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலிருந்தும் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பரபரப்பான சூழல்களால் மாநகராட்சி ஊழியர்களால் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச இயலாமல் போனது. அலுவலர்களும் மரக்கன்றுகள் விஷயத்தில் ஆர்வம் காட்ட இயலவில்லை.  இந்நிலையில் கடந்த சில நாள்களாக நிலவும் கடும் வெப்பத்தால், மரக்கன்றுகள் ஆங்காங்கே கருகத் தொடங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் (மாநகராட்சி எல்லையில் உள்ள சாலைகள் உள்பட) சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக, புதிய மரக்கன்றுகள் நடப்படவில்லை என்ற நிலையில், மாநகராட்சியின் நடவடிக்கையால் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தன.  மரக்கன்றுகளும் நன்கு வளர்ந்த நிலையில் தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் கருகி வருகின்றன. மரக்கன்றுகள் முற்றிலும் காய்ந்து கருகும் முன்பு மரக்கன்றுகளை காக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கண் மருத்துவ உதவியாளர்கள் பணிச் சுமையால் அவதி

பாபநாசம், ஏப்.23 - தமிழ்நாடு அரசு ஆப்தோமெட்ரி ப்ரொபஷனல்ஸ் அசோசியேஷன் மாநிலப் பொதுச் செயலர் க. ரெங்க ராஜ் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில்,  “தமிழகத்தில் 35 ஆண்டுகளாக சுகாதாரத் துறையில்  பணியிலுள்ள கிராமப்புற கண் மருத்துவ உதவியா ளர்களுக்கு, சீனியர் ஆப்தோமெட்ரிஸ்ட் என்ற பதவி பெயர் மாற்றம் தமிழகத்தில் வழங்கப் படாதது மிகவும்  வருத்தமளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இங்கு 100 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிச் சுமை யால், மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும். அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு ஒன்றிய அரசு பரிந்துரைப்படி கண் மருத்துவ உபகர ணங்கள் வழங்கப்பட வேண்டும். வட்டார அளவிலான முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இதுதான்  தற்போதைய தேவையாக உள்ளது” என தெரிவித்து உள்ளார்.

வழக்கறிஞர் மீது தாக்குதல்: அரியலூரில் நீதிமன்ற புறக்கணிப்பு

அரியலூர், ஏப்.23 - செந்துறை வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ராச.பிரபா கரன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், செந்துறை  வழக்கறிஞர் சங்க வேண்டுகோளை ஏற்று அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் செவ்வாயன்று (ஏப்.23) ஒரு நாள் மட்டும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என தீர்மா னிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம்,  மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றம், மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம், மாவட்ட குடும்பநல நீதிமன்றம், மாவட்ட கூடுதல் மகிளா நீதி மன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு  நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,  கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல்  நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1, குற்றவியல் நீதித்துறை  நடுவர் நீதிமன்றம் எண்.2 ஆகிய 12 நீதிமன்றங்களின் வழக்காடு வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற புறக் கணிப்பில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பனை இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உட்பட இருவர் கைது

புதுக்கோட்டை, ஏப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக் கோட்டை அருகே கத்தக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயரவி வர்மா (36). கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டதால் இடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை நகரக் காவல் துறையி னர் செவ்வாய்க்கிழமை டிவிஎஸ் முக்கம் அருகே நடத்திய அதிரடி சோதனையில், ஜெயரவிவர்மாவும், கம்பன் நகரைச் சேர்ந்த  பாலசுப்பிரமணியன் (45) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1900  கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாக னங்கள் இரண்டு, இரு கைப்பேசிகள், ரூ.2030 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

;