திருவாரூர், பிப்.11- திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுகாதார மையம், நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து பல்கலைக் கழக சுகாதார மையத்தில் இரத்ததான முகாமை நடத்தின. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் முகாமைத் துவக்கி வைத்து இரத்த தானம் செய்த மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் அலுவலர்களைப் பாராட்டி பேசினார். நிகழ்ச்சிக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் சுலோச்சனா சேகர், நிதி அதிகாரி கிரிதரன், திரு வாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் செந்தில் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்த தான முகாமை பல்கலைக் கழக சுகாதார மையத்தின் மூத்த மருத்து வர் விஷ்ணு பிரியா, டாக்டர். பிரேம் டேவிஸ், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பால சண்முகம், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கி ணைப்பாளர் டாக்டர். குணசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இரத்த தான முகாமில் 50 பேர் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.