districts

img

இலங்கைத் தமிழர் முகாமில் பொங்கல் பரிசு வழங்கல்

கரூர், ஜன.10 - கரூர் மாவட்டம் தாந்தோணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆச்சிமங்கலம் நியாயவிலைக் கடையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு புதனன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொண்ட பெருமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரோஜா கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய இந்தப் தொகுப்பை வைத்து பொங்கல் பண்டிகையை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம்.  ஏழைகளின் துயர் துடைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்” என்றார்.