districts

img

ஆரோக்கியமான கல்லீரல் குறித்த விழிப்புணர்வு பேரணி

 உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சார்பில் கல்லீரல் அழற்சி மற்றும் ஆரோக்கியமான கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு வாக்கத்தான்  சென்னையில் நடைபெற்றது.  தீவுத்திடலில் இதனை நடிகர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த வாக்கத்தானில் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றிய வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனரை ஏந்திச்சென்றனர்.