districts

img

ஆட்டோ சங்க புதிய கிளைகள் துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1-

    திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் அய்யம் பாளையத்தில் பயணிகள் ஆட்டோ சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் சார்பாக முசிறி தா.பேட்டை ரவுண்டானா  அருகில் லோடு ஆட்டோ சங்கம், முசிறி புதிய  பேருந்து நிலையம் அருகில் டூரிஸ்ட் கார்  மற்றும் வேன் ஓட்டுநர் சங்கம் ஆகிய வற்றின் புதிய கிளை துவக்க விழா சனிக் கிழமை நடைபெற்றது.  

    அனைத்து இடங்களிலும் சிஐடியு கொடி யும், சங்கத்தின் புதிய பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர்  சம்பத், மாவட்டச் செயலாளர் சிவராஜன், ஆட்டோ சங்க புறநகர் மாவட்டச் செயலாளர்  சந்திரசேகரன், சிபிஎம் முசிறி ஒன்றியச் செயலாளர் நல்லுசாமி, விவசாய சங்க தலை வர் கிருஷ்ணன், ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, ரங்கதுரை மற்றும் முசிறி ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.