districts

சத்தியவாணன் பாசன வாய்க்காலில் திறந்து விடப்படும் சாக்கடையால் பாதிப்பு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மக்கள் புகார்

மயிலாடுதுறை, அக்.3 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங் கள் நடைபெற்றன. பரசலூர் ஊராட்சி யில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி  தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். ஊராட்சிக்குட்பட்ட நீர்நிலை களில் காவிரி நீர் வர நடவடிக்கை எடுக்க  வேண்டும். பாசன வாய்க்காலான சத்தி வாணன் வாய்க்காலில், மயிலாடுதுறை நகராட்சியில் வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவு நீரால் கடந்த  10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசா யமும், மக்களும் பாதிக்கப்படுகின்ற னர். இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  ஆக்கூரில் நடைபெற்ற கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் சந்திரமோகன்  தலைமை வகித்தார். கூட்டத்தில், சத்தியவாணன் பாசன வாய்க்காலில் திறந்துவிடப்படும் மயிலாடுதுறை பாதாள சாக்கடையால் பெரும் பாதிப்பை பல ஆண்டுகளாக சந்திப்ப தாகவும், உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

காழியப்பநல்லூர் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் கருணாநிதி தலை மையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் நிலவும் குறை மின் அழுத்த பிரச்சனையை சீர் செய்ய வேண்டும். நடுநிலைப் பள்ளி அமைக்க வேண்டும். ஊராட்சிக்கு சொந்தமான குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. எடுத்துக் கட்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர்  பைலட் தலைமையில் கூட்டம் நடை பெற்றது. அடிப்படை வசதிகள் மேம் படுத்துதல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  உத்திரங்குடி ஊராட்சியில் நடை பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லெனின்  மேசாக் தலைமை வகித்தார். சங்கரன் பந்தலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் மருத்துவரை நியமிக்க  வேண்டும். ஜெனரேட்டர் வசதி செய்து  தர வேண்டும். அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும். ரேசன் கடை யில் தரமான அரிசி வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. விசலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி  மன்ற தலைவர் அனுசியா இளைய ராஜா தலைமை வகித்தார். பழுதடைந் துள்ள சாலையை சீரமைத்து தர  வேண்டும். சேதம் அடைந்து காணப்படும் பொது சுகாதார வளாகத்தை புதுப் பித்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தினர். மேலும், திருவிடைக்கழி, செம்ப னார்கோயில், திருக்கடையூர், பெரம்பூர், திருவிளையாட்டம் உள்ளிட்ட  57 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

;