districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 3- அரசு போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கிளைக் கூட்டம் அரிய லூரில் கிளைத் தலைவர்  எம்.முருகன் தலைமை யில் நடைபெற்றது. மண்டல பொது செயலா ளர் ஜே.மாணிக்கம், சிஐடியு மாவட்டச் செய லாளர் துரைசாமி ஆகி யோர் சிறப்புரையாற்றி னர். கிளைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சந்தா னம், ஜோதிவேல் அழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, ஜூலை 10 ஆம் தேதி அரியலூர் மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.

மஞ்சள் பை வழங்கல்

பாபநாசம், ஜூலை 3 - நெகிழி ஒழிப்பு தினத்தையொட்டி, பாப நாசம் ரோட்டரி கிளப்  சார்பில் பொது மக்க ளுக்கு மஞ்சள் பை வழங் கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து  நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு மஞ்சள் பையை, பாப நாசம் தாசில்தார் மணி கண்டன் வழங்கினார். பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல், செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராமநாதன், உதவி ஆளுநர் அறிவ ழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர் திருட்டு: 2 பேர் கைது

அரியலூர், ஜுலை 3 -  அரியலூர் மாவட் டத்தில் செயின் பறிப்பு மற்றும் பல்வேறு கோயில் களில் உண்டியல் திருட்டு  வழக்குகளில் சம்பந்தப் பட்ட நபர்களை கைது  செய்ய, ஜெயங்கொண் டம் காவல் ஆய்வாளர்  ராமராஜன் தலைமை யில் தனிப் படை அமைக் கப்பட்டது. இப்படையினர், அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது கடலூர் மாவட்டம் நெய்வேலி, முத்தாண்டி குப்பம், காடாம்புலியூர் காவல் நிலையப் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்த போது பதிவான சிசிடிவி  காட்சிகள் மற்றும் புகைப் படங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர். புகைப்படத்தை வைத்து நடத்தி விசார ணையில், புகைப்படத் தில் இருப்பவர் அரிய லூர் மாவட்டம் பொன் பரப்பியைச் சேர்ந்த தமிழ்பாரதி என தெரிய  வந்தது. தமிழ் பாரதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தமிழ் பாரதியை  புதனன்று போலீசார் கைது செய்தனர்.  மேலும், அவனிட மிருந்து 3 இருசக்கர வாக னங்கள் மற்றும் குற்ற  வழக்குகளில் தொடர்பு டைய 16 சவரன் நகை களை மீட்டனர். அவ னுடன் தொடர்புடைய பூமுடையான் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரையும் கைது செய்தனர். கட லூர் மாவட்டத்தில் திரு டிய நகைகளை முந்திரி காட்டில் மறைத்து வைத் துக் கொண்டு, கடந்த 3  மாதமாக முந்திரி காட்டி லேயே மறைந்து வாழ்ந்து  வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.  இந்த தமிழ் பாரதி மீது, அரியலூர் மாவட் டத்தில் ஜெயங்கொண் டம், மீன்சுருட்டி, ஆண்டி மடம், உடையார்பாளை யம், இரும்புலிக்குறிச்சி, செந்துறை, அரியலூர் ஆகிய காவல் நிலையங் களில் 22 வழக்குகள் நிலு வையில் உள்ளன.

மாற்றுத் திறனாளியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்: மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

மாற்றுத் திறனாளியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்: மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது புதுக்கோட்டை, ஜூலை 3 - சோலார் மின் உற்பத்தி அமைப்புக்கு மீட்டர் வைக்க மாற்றுத் திறனாளியிடம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி  செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் அம்மன் ஐஸ் பிளாண்ட் நடத்தி வருபவர் நீலகண்டன். இவரது நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் நாராய ணசாமி. இவர்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள். இவர்கள், தங்களது ஐஸ் பிளாண்டில் 96 கிலோவாட் அள வுக்கு சோலார் மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தியுள்ள னர். இதற்கு மின்வாரியத்தில் இருந்து மீட்டர் அமைத்துத் தர  வேண்டும். இதற்காக நாகுடி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளனர். இங்கு உதவி செயற்பொறியாளராக உள்ள பிருந்தாவ னன் (44), இவர்களிடம் ரூ.5 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள் ளார். பின்னர் படிப்படியாக நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.1.75  லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நாராயணசாமி, புதுக் கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீ சில் புகார் அளித்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன், ஆய்வாளர் ஜவஹர் ஆகியோரது ஆலோச னையின் பேரில், முதல் தவணைத் தொகை ரூபாய் ஒரு  லட்சத்தை செவ்வாய்க்கிழமை கொடுக்க முடிவு செய்யப்பட் டது. இதன்படி, செவ்வாய்க்கிழமை பகலில் மின்வாரிய அலுவ லகத்தில் லஞ்ச பணத்தை கொடுத்த போது, அருகில் இருந்த  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனனை கையும் களவு மாகப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பிருந்தாவனன் கைது செய்யப் பட்டு, நீதிமன்றக் காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

தஞ்சாவூர், ஜூலை 3 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி  ஓடிய மர்ம நபரை காவல் துறையினர் தேடி வரு கின்றனர்.  பேராவூரணி அருகே யுள்ள நெல்லியடிக்காடு கிரா மத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி நாகரெத்தினம் (78). இவர்  செவ்வாய்க்கிழமை அதி காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்த  போது, திடீரென கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், நாக ரெத்தினம் கழுத்தில் அணிந் திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நாக ரெத்தினத்தின் மகன் கிருஷ் ணமூர்த்தி பேராவூரணி காவல் நிலையத்தில் புகார்  செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் பசுபதி வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

எம்ஜிஆர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூலை 3 - திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள எம்ஜிஆர்  கலை அறிவியல் கல்லூரியில், மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணாக் கர்கள் மீதமுள்ள காலி இடங்களுக்கு ஜூலை 3 முதல்  ஜூலை 5 வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில்  (https://www.tngasa.in/) விண்ணப்பிக்க உரிய வழி வகை செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் உரிய பதிவுக்  கட்டணம் (பொதுப் பிரிவினர்: ரூ.50/- மற்றும் எஸ்.சி/ எஸ்.டி: ரூ.2/-) செலுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இக்கல்லூரியில் காலியாக உள்ள பி.ஏ. (தமிழ்), பி.ஏ  (ஆங்கிலம்), பி.காம் (வணிகவியல்), பி.எஸ்.சி (கணிதம்)  மற்றும் பி.எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவு களுக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். மதிப்பெண் மற்றும் இன சுழற்சியின் அடிப்படை யில் 8.7.2024 முதல் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக் கர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்யப் பட்ட மாணாக்கர்கள் கலந்தாய்வுக்கு வராத நிலையில், தற்போது அம்மாணாக்கர்கள் மாணவர் சேர்க்கை கோரும்  பட்சத்தில் காலியாக உள்ள இடங்களில் சேர்க்கை வழங்கப் படும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் குடிநீர்த் தொட்டியில் கலப்பு?

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3- திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திர நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து,  கழிவுநீர்  வெளியேறி அருகில் உள்ள ராமச்சந்திர நகர் பகுதி குடி யிருப்பு நீர்த்தேக்க தொட்டியுடன் கலந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரமற்ற நிலை ஏற்படு வது மட்டுமல்லாமலும், துர்நாற்றமும் வீசுகிறது. பொது மக்கள் அந்தக் குடிநீரை குடிக்கும் பொழுது பாதிப்பு ஏற்படும்  நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அடுக்குமாடி  குடியிருப்பு வாசிகளிடம் புகார் கூறியும், எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில், பொதுமக்கள் புதனன்று அந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எடமலைப்பட்டி  புதூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது, “இன்னும் ஒரு வாரத்தில் நடவ டிக்கை எடுப்பதாக” உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செம்பனார்கோவில்  ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை

மயிலாடுதுறை, ஜூலை 3 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எடுத்துக்கட்டி சாத்தனூர்,  திருவிடைக்கழி, தில்லையாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. எடுத்துக்கட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் பைலட் தலைமை வகித்தார். திருவி டைக்கழியில் ஊராட்சி தலைவர் சங்கீதா நாகராஜன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல துணை வட்டார  வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி செயலர் மதி  மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர். தில்லையாடியில் ஊராட்சி தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பொறியா ளர் வினோத், ஊராட்சி செயலர் செல்வராணி மற்றும் ஊராட்சி  உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு, கலைஞரின் கனவு இல்லம்,  ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்டவை குறித்து கூட்டத் தில் கலந்துரையாடப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு வாங்க இன்று கடன் வழங்கும் முகாம்

தஞ்சாவூர், ஜூலை 3-  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருச்சி கோட்டம் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப் பட்டுள்ள அய்யனார் கோயில் திட்டப்பகுதி, கூடநாணல்  திட்டப்பகுதி மற்றும் மகாராஜசமுத்திரம் திட்டப் பகுதி யில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்டு, பயனாளி பங்க ளிப்புத் தொகை செலுத்த இயலாத பயனாளிகளுக்கு, வங்கிக் கடன் வழங்குவதற்கான முகாம் 4.7.2024 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெறவுள்ளது.  இம்முகாமில் வங்கிக் கடன் பெற ஆதார் கார்டு, பான்  கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட  ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வருமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில்  மாணவர்கள் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

கும்பகோணம், ஜூலை 3 - கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 2024 –2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெற்று சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசி னர் கலை கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முதல்  மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள், ஜூலை 3 அன்று உற்சாகத் துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவர்களை சக மாண வர்களும் பேராசிரியர்களும் வரவேற்றனர் கல்லூரியில் காலியாக உள்ள மாணாக்கர் சேர்க்கை இடங்களை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில், ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை, TNGASA இணைய தளத்தில் விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் விண்ணப்பிக்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் உரிய பதிவு கட்டணம் செலுத்தி பதி வேற்றம் செய்து, கல்லூரியில் சேர்வதற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9-இல் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி

புதுக்கோட்டை, ஜூலை 3 - புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 7  ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி, ஜூலை 9 ஆம் தேதி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்கும் புதுக் கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடத்தப்பட வுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய வற்றின் சார்பில் 7 ஆவது புத்தகத் திருவிழா ஜூலை 27 அன்று தொடங்கி ஆக.5 வரை மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துத் துறை அலு வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு  தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரும் புத்தகத் திருவிழா விழாக் குழுத் தலைவரு மான ஐ.சா.மெர்சி ரம்யா பேசியதாவது: புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்க ளில் வருகை தரும் மக்களுக்கான கழிப்பறை,  குடிநீர் வசதிகளை நகராட்சி நிர்வாகமும், தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்  வாகனங்களை நிறுத்தி வைக்க தீயணைப்பு மற்றும் மருத்துவத் துறையினரும் ஏற்பாடு  செய்ய வேண்டும். அதேபோல, தடை யில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகத் திருவிழா குறித்த தகவலை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ஜூலை 9 ஆம் தேதி, மாவட்டம் முழுவதும் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியை அனைத்து பள்ளி, கல்லூரி களிலும், அரசு அலுவலகங்களிலும் தவறாது நடத்த வேண்டும். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை ஜூலை 16  அன்று ஒன்றிய அளவில் நடத்தி, ஜூலை  19 அன்று மாவட்ட அளவில் நடத்த மாணவர் களை அனுப்பி வைக்க வேண்டும். அதே போல, ஜூலை 18 ஆம் தேதி கல்லூரி மாண வர்களுக்கான போட்டிகளில் பங்கேற்பதற் கான ஏற்பாடுகளை உயர்கல்வித் துறை மேற் கொள்ள வேண்டும்.  அனைத்துத் துறையினரும் ஒருங்கி ணைந்து பணியாற்றி புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.  இவ்வாறு ஆட்சியர் பேசினார்.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.ரம்யாதேவி, மன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத் துறை யினரும், புத்தகத் திருவிழாக் குழு ஒருங்கி ணைப்பாளர்களும் பங்கேற்றனர்.

 

;