அறந்தாங்கி, ஏப்.1 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில், இந்தியன் ஃபிட்னஸ் டெக்ரேசன் மற்றும் அறந்தாங்கி எஸ். எம்.ஜிம் இணைந்து மாநில அளவிலான 2 ஆவது ‘மிஸ்டர் எஸ்.எம். கிளாசிக்-2024’ ஆண ழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அளவில் இருந்து, திருச்சி, சேலம், சென்னை, கோயம்புத்தூர், புதுக் கோட்டை என பல மாவட்டங் களைச் சேர்ந்த 150 போட்டியா ளர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக கோயம் புத்தூர் சேர்ந்த ஜெகநாதன், மனோஜ்குமார், மதுரையைச் சேர்ந்த வெரோனிகா, திருச்சி யைச் சேர்ந்த ராகுல்ராஜ் ஆகி யோர் பணியாற்றினர். போட்டி யின் சிறப்பு விருந்தினராக கீர்த்தி எலக்ட்ரானிக்ஸ் சிவகாமி முருகன் மற்றும் கே.சரவணன் பங்கேற்ற னர். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பரிசை சென்னை யைச் சேர்ந்த நடராஜ் தட்டிச் சென்றார். 2 ஆவது பரிசை புதுக் கோட்டையைச் சேர்ந்த மணி பெற்றார். இதில் வென்றவர் களுக்கு கேடயம் மற்றும் சான்றி தழ் வழங்கப்பட்டது.