districts

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு மயிலாடுதுறை, ஆக.9- தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் - 2024 குறித்த செய்திக் குறிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் முதல் பதிப்பு 27.9.2024  அன்று வழங்கப்படும். விருது வகைகள் பின்வருமாறு: தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமி டம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா  ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்த மான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர். சிறந்த எம்ஐசிஇ (MICE) சுற்றுலா அமைப் பாளர், சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா  வழிகாட்டி, தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவினை பிரபலப் படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத் துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவு களின்கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்  தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.9. 2024) சென்னையில் வழங்கப்படும். அதற் கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08. 2024. விண்ணப்பங்களை www.tntourism awards.com என்ற இணையதளத்தில் பதி விறக்கம் செய்து, பூர்த்தி செய்யலாம்” என  தெரிவித்துள்ளார்.