நாகப்பட்டினம், செப்.4 - நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திட லில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திரங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமினை நடத்தின. இதனை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் திறந்து வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பங்கேற்று பார்வையிட்டார். விவசாயிகள் பல்வேறு வேளாண் பணி களை காலத்தே மேற்கொள்வதற்கும், சாகு படி செலவினத்தினை குறைப்பதற்கும், வேளாண் இயந்திர சக்தியை அதிகரிப்பதற் கும், உழவு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப் பின் தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முறையான பயன்பாடு, பரா மரிப்பு முறைகள் குறித்த மாவட்ட அள விலான இந்த விழிப்புணர்வு முகாம் நாகப் பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடல் வளாகத்தில் நடை பெற்றது. முகாமில் டிராக்டர், பவர் டில்லர், களை எடுக்கும் கருவிகள், நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், ரொட்டவேட்டர் கள், வைக்கோல் கட்டும் கருவிகள் கைத் தெளிப்பான்கள், விசைத் தெளிப்பான்கள் மற்றும் மோட்டார்கள், ஆயில் என்ஜின்கள், சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன கருவிகள் போன்ற இயந்திரங்களை கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் முறை கள் பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.