தஞ்சாவூர், செப்.25- ஆதிச்சநல்லூர், கீழடி அக ழாய்வு அறிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டுமென என உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட் டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தஞ்சாவூரில், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத் தில், தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு என்கிற உலகத் தமி ழர் பேரமைப்பின் 10-ஆம் மாநாடு சனிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து இரு நாட்கள் நடை பெற்றன. இதில், நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள்: கீழடி ஆய்வின்வழி கிடைத்த வரலாற்றுச் செய்திகளின் உந்து தலினால் தமிழ்நாட்டு மக்களி டையே தொல் ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. தமிழக அரசு பொற்பனைக் கோட்டை, துலுக்கர்பட்டி, பூதிநத் தம், மயிலாடும்பாறை, கீழ்நமண்டி, கங்கைகொண்டசோழபுரம், வெம்பக்கோட்டை, பட்டறைப் பெரும்புதூர், கொற்கை, சிவ களை, ஆதிச்சநல்லூர் வாழ்விடம் எனப் பல்வேறு இடங்களில் தமி ழக அரசின் தொல்லியல் துறை யின் மூலமாக ஆய்வுகளைத் தொடங்கியுள்ளதற்குத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறோம்.
அகழாய்வுப் பணிகள் தொய்வின்றித் தொடர வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை, கீழடி அகழாய்வு அறிக் கையை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிடவேண்டும். அதற்குத் தமி ழக அரசும், ஏனையோரும் குரல் கொடுக்க வேண்டும். பூம்புகார் உள்ளிட்ட கடல் ஆய்வுகளுக்கு நவீன வசதியுடன் கூடிய கப்பல்கள், கருவிகளை வாங்குவதற்கும், கடல்சார் ஆய்வு களை முன்னெடுப்பதற்கும் தமி ழக அரசின் தொல்லியல் துறையில் தனிப் பிரிவைத் தொடங்கவும், மத் திய அரசிடமிருந்து நல்கை பெற வும் உரிய நடவடிக்கைகளைத் தமி ழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் நாள் மாநாடு வழக்குரைஞர் த.பானுமதி தலை மையில் தொடங்கியது. பேரமைப் பின் துணைத்தலைவர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சு. இராசவேலு, க.த.காந்திராசன், பேரமைப்புச் செயலர் தமித் தலட்சுமி தீனதயாளன் ஒருங்கி ணைப்பிலான இரண்டாம் அமர்வில் கணியன் பாலன், முனைவர்கள் தியாக சத்திய மூர்த்தி, மார்க்சிய காந்தி, அமர் நாத் இராமகிருட்டிணா ஆகியோர் பேசினர். மாநாட்டுத் தீர்மானங்களை இரா.முரளீதரன் வாசித்தார். உலகத்தமிழர் பேரமைப்பின் தலை வர் பழ.நெடுமாறன் காணொலி மூலம் பேசினார். சதா.முத்துக் கிருட்டிணன் நன்றி கூறினார்.