districts

img

டெல்டா மாவட்டங்களில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சிராப் பள்ளி, அரியலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்  நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா உற்சாக மாக கொண்டாடப்பட்டது. திருச்சி லால்குடி ரவுண்டானா அருகில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஜெக தீசன் தலைமை வகித்தார். தேசிய கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் ஏற்றினார். மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான வெண் மணி இல்லத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர் மாவட்டச்  செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மத்தியக் கட்டுப்பாட் டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் தேசியக் கொடியை ஏற்றி னார். ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற சுதந்திர  தின விழாவிற்கு பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். தேசிய கொடியை சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் ஏற்றினார்.  

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்துநிலை யம் எதிர்புறம் அம்மா உணவகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், தேசிய கொடியை டாக்டர் பழனிவேல் ராஜன் ஏற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவி வர்மன் சிறப்புரையாற்றினார்.
பிரன்ட்ஸ் ரோட்டரி 
அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலை உதயம் காம்ப்ளக்ஸ் அருகே அறந்தாங்கி பிரன்ஸ் ரோட்டரி கிளப்  சார்பாக 75 வது சுதந்திர தின விழா தலைவர் புவனா  செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த் தேசியகொடியை ஏற்றினார்.
கார்னிவல் கல்லூரி
அறந்தாங்கி அகரம் பகுதியில் இயங்கி வரும் கார்னி வல் ஸ்கில் டிரைனிங் இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற விழா விற்கு கல்லூரி தாளாளர் ஆடிட்டர் தங்கதுரை தலைமை  வகித்தார். கல்லூரி முதல்வர் ரெங்கசாமி முன்னிலை யில், பிரன்ட்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் புவனா செந்தில் குமார் தேசியக்கொடி ஏற்றினார்.
அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளி
அறந்தாங்கி - காரைக்குடி சாலையில் இயங்கி வரும்  அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில், தாளாளர் டி.என்.எஸ் தலைமையில் விழா நடை பெற்றது. நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் தேசியக் கொடி  ஏற்றினார்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியத்தில் மூன்று பட்டியலின தலைவர்கள் உட்பட அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி  மன்ற தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். கொப்ப னாபட்டி ஊராட்சியில் பட்டியலின தலைவர் மேனகா மகேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர  தின விழாவில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். பின்னர்,  84 பேருக்கு ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பல்வேறு துறை களில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை கணபதி  நகர் மாவட்டக்குழு அலுவலகத்தில், சுதந்திர தின கொடி யேற்று விழா, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசியக் கொடியை கட்சியின் மூத்த தலைவர் என்.சீனிவா சன், கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.  தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் முது நிலை கோட்ட மேலாளர் கே.கே.சுஜித் தலைமையில் கொடியேற்றப்பட்டது. எல்ஐசியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 75 வயதைக் கடந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பள்ளிகள்
பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சரவணன் தலைமை வகித்தார்.  டாக்டர் செல்லப்பன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பள்ளி கொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பட்டுகோட்டை அரசு மருத்துவ மனை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.  பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் லயன்ஸ் வி.ஏ.டி.சாமியப்பன் தலைமை வகித்தார். அறக் கட்டளை உறுப்பினர் ரவிச்சந்திரன் தேசியக் கொடி ஏற்றி னார். பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி தாளா ளரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவருமான ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். தீயணைப்பு துறை ஊழி யர்கள் கௌரவிக்கப்பட்டனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமாரும், பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகரும், ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கரும் கொடி யேற்றி வைத்தனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர குழு செயலாளர் கா. செந்தில்குமார் தலைமை வகித்தார். கும்பகோணம் பேருந்து நிலையம் முன்பு மூவர்ண கொடியினை கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் ஏற்றி னார். கட்சிக் கொடியை மாதர் சங்க மாநகரச் செயலாளர் எஸ்.சுமதி ஏற்றினார். தாராசுரத்தில் மாமன்ற உறுப்பினர் செல்வம் மூவர்ண கொடியேற்றினார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற அலுவ லகத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தேசியக் கொடியை ஏற்றினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மயிலாடு துறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோயில், கொள்ளி டம் ஆகிய 6 ஒன்றியங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்க ளில் சுதந்திர தின விழா மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவ லகம், செம்பனார்கோயில் ஒன்றியக்குழு அலுவலகம் (ஆக்கூர்), திருவிளையாட்டம் கிளை அலுவலகம் ஆகிய  இடங்களில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தேசியக்  கொடியினை ஏற்றி வைத்தார். தரங்கம்பாடி ஒன்றியக்குழு அலுவலகம் அமைந்துள்ள திருக்கடையூரில் மாதர் சங்கத் தின் மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி தேசிய  கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.சிம்சன் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
திருவாரூர்
திருவாரூரில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் சிபிஎம் மாவட்ட செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். நகர செயலாளர் எம்.தர்ம லிங்கம் தலைமை வகித்தார்.
புலிவலம் 
புலிவலம் கடைவீதியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர்  என்.இடும்பையன் தலைமையில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்வில் சுதந்திர போராட்ட வீரர் ஏ.வெங்கடா சலம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி யின் மூத்த தோழர் கே.ரெங்கசாமி கட்சிக் கொடியையும், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன் வாலிபர் சங்க கொடியையும், மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பா.கோமதி மாதர் சங்க கொடியையும் ஏற்றி வைத்த னர். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் சுதந்திர தின உரையாற்றியதோடு, குடும்ப வன்முறை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
தேசிய கொடியேற்றிய தூய்மை பணியாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் நகர குழு  சார்பில் அழகிரி காலனியில் நடைபெற்ற விழாவில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசியக்  கொடியினை தூய்மை பணியாளர் எஸ்.மூர்த்தி ஏற்றி வைத்தார்.
மன்னார்குடி 
மன்னார்குடி 26 வது வார்டு வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு மகளிர் மேம்பாட்டு அமைப்பான ‘நாங்கள் மகளிர்  வட்டம்’ சார்பில் 75 வது சுதந்திர தின பவள விழா நடை பெற்றது. அமைப்பின் தலைவர் தெ.சங்கரி தலைமை யில், தேசியக் கொடியை மூத்த உறுப்பினர் கோ.ராஜேஸ் வரி ஏற்றி வைத்தார்.
கருத்தரங்கம்
சிஐடியு சார்பில் சுதந்திர தின பவள விழா திறந்த வெளி கருத்தரங்கம் மன்னார்குடி பந்தலடியில் நடைபெற் றது. மாவட்ட துணை துணைத்தலைவர் ஜி.ரெகுபதி தலை மையில் நடைபெற்ற கருத்தரங்கில், மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் இரா. மாலதி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஜெகதீசன் முன்னிலை வகித்த னர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன்  ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு சிதம்பரம் சாலை 16-வது வார்டில் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்க டாசலம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் வாலண்டினா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
கரூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு அலுவலகம் முன்பு தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள்  வழங்கப்பட்டது. கட்சியின் கரூர் மாநகர செயலாளர் எம்.  தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசி னார். கட்சியின் செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம் ஏற்றி வைத்தார். சிஐடியு கொடியை மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஏற்றி வைத்தார்.

;