திருவாரூர், ஜன.21- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் தியாகி ஜெ.நாவலன் 14 ஆம் ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பேரளம் கடை வீதியில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில், 52 பேர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். பொதுக் கூட்டத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ.முகமதுஉதுமான், பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செய லாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு ஜெ.நாவலன் நினைவாக 14 ஆண்டு களாக தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் குருதிக்கொடை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் வாலிபர் சங்கத்தின் சார்பாக 33 இளைஞர்கள் குருதிக்கொடை வழங்கினர். குருதிக் கொடை வழங்கிய இளைஞர்களுக்கு சான்றி தழ் வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகிலம்பேட்டை, சித்தம்பூர், திருமீச்சூர், பேரளம், பேரளம் புதுத்தெரு பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என 52 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.