districts

img

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி/அரியலூர், ஜூலை 2- ஒன்றிய பாஜக அரசு கடந்தாண்டு  140 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து விட்டு, எந்த விவாதங்களு மின்றி மூன்று குற்றவியல் சட்டங் களை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது.  பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷய அதினி யம் என்று சமஸ்கிருதத்தில் பெயரி டப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1  அன்று முதல் நடைமுறைக்கு வந்து உள்ளன. இச்சட்டங்கள் ஜனநாயக உரிமை களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை நசுக்குவதாக உள்ளது. அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாட்டின்  செல்வங்களை ஒப்படைப்பதற்கு ஏதுவாகவும், அதற்கு எதிராக  போராடுபவர்களை ஒடுக்குவதற் காகவும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வழக் கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்ற னர். மேலும் இச்சட்டங்கள், மக்க ளாட்சியின் மாண்பையும், மனித உரி மைகளையும் பறிக்கும் விதமாகவும், நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும், அர சியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகவும் உள்ளது. மக்கள் விரோத  இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக்  கூடாது. தற்போதுள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள் முன்பாக இச்சட்டங்களை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும்.  இதனை வலியுறுத்தி திங்க ளன்று உண்ணாவிரதப் போராட்ட மும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. புதனன்று (ஜூலை 3)  ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம். ஜூலை  8 அன்று மாநிலம் தழுவிய அளவில்  வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து திருச்சியில் பிரம்மாண்ட பேரணி  நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் நடை முறைப்படுத்தக் கூடாது என வலி யுறுத்தி திருச்சி நீதிமன்ற வளாகம்  முன்பு செவ்வாயன்று திருச்சிராப் பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஜாக் செயலா ளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த வழக்கறி ஞர்கள் முத்துகிருஷ்ணன், வீரமணி,  ஓம் பிரகாஷ், திருச்சி வழக்கறி ஞர்கள் சங்க செயலாளர் சுகுமார், துணைத் தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் சந்தோஷ் குமார், அப்துல்கலாம் மற்றும் வழக்கறிஞர்கள்,  செயற்குழு உறுப்பினர்கள், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ் உள்பட பலர் கலந்து  கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம், திருச்சி  சாலையிலுள்ள அஞ்சல் நிலை யத்தை முற்றுகையிட்டு வழக்கறி ஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக் குமரன், பொருளாளர் கொளஞ்சி யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

;