districts

img

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்

திருச்சிராப்பள்ளி/புதுக்கோட்டை/அரியலூர், ஜூலை 3- ஒன்றிய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.  இதை கண்டித்து திருச்சி ராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. முதல் நாள்  உண்ணாவிரதம், 2 ஆம் நாள் ஆர்ப்பாட்டம், 3 ஆம் நாளான புத னன்று ஒன்றிய அரசு அலுவலக மான பி.எஸ்.என்.எல். தலைமை அலு வலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருச்சிராப் பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத் தலை வர் பாலசுப்பிரமணியன், ஜாக் செய லாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த வழக்கறி ஞர்கள் முத்துகிருஷ்ணன், மார்ட்டின்,  வீரமணி, ஓம் பிரகாஷ், திருச்சி  வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழ கன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்  கலந்து கொண்டனர்.  ஜூலை 8 அன்று மாநிலம் தழு விய அளவில் நடைபெற உள்ள வழக்கறிஞர்களின் பேரணி, திருச்சி மாவட்டத்தில் நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, உழவர் சந்தையில் முடிவடைகிறது என வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்தார். புதுக்கோட்டை ஒன்றிய அரசின் புதிய 3 குற்ற வியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட நீதி மன்ற வளாகத்துக்கு வெளியே நடை பெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்  தலைவர் வி.டி.சின்னராஜு தலைமை  வகித்தார். துணைத் தலைவர்கள்  வி.பரமசிவம், கே.ரெங்கபதாக தேவி, இணைச் செயலர்கள் ஏ. அருள்மொழிவேந்தன், ஏ.பர்வீன் பானு, பொருளாளர் வி.சுரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, அறந்தாங்கியில் அம்மா உணவகம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அறந் தாங்கி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். கடந்த திங்கள்கிழமை முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வரு கின்றனர்.  மணகெதி சுங்கச்சாவடி முற்றுகை புதன்கிழமை திருச்சி-சிதம்பரம் சாலையிலுள்ள மணகெதி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிர வன், செயலர் முத்துக்குமரன், பொரு ளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர்  பங்கேற்றனர்.

;