districts

திருச்சி முக்கிய செய்திகள்

போலி மருத்துவர் கைது

அரியலூர், ஜூன் 16- அரியலூர் மாவட்டம் திரு மானூர் அருகே உள்ள விரகா லூர் மெயின் ரோட்டில் விக்னேஷ் வரன் என்ற பெயரில் மருந்து  கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்கா மல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருமானூர் வட்டார  மருத்துவ அலுவலர் மணி வண்ணனிடம் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவர் மணிவண்ணன், மருந்து கடையை ஆய்வு செய்த போது, ஆங்கிலம் மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் வகையில் ஆங்கில மருத்து வம் பார்த்த, தஞ்சாவூர்  மாவட் டத்தைச் சேர்ந்த பன்னீர்செல் வம் மீது திருமானூர் காவல்  நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பன்னீர் செல் வத்தை கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.

12 கிலோ கஞ்சா  பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சிராப்பள்ளி,  ஜூன் 16 - கஞ்சா விற்பனையை தடுக்க, திருச்சி மாநகரில் மாநகர காவல் ஆணையர் காமணி உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் போலீ சார் ரோந்து மற்றும் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். 

இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி சாலையில் அடிக்கடி சிலர் கஞ்சா விற்றுக்  கொண்டிருப்பதாக மதுவிலக்கு  போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு  காவல் உதவி ஆய்வாளர் உமாசங்கரன் தலைமையி லான போலீசார், வ.உ.சி சாலைக்கு சென்று பார்த்த போது அங்கு ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். 

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் இராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த செல்வம் (54) எனவும், இவர் திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்துள்ள னர். 

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து  20 ஆயிரம். மேலும் அவரிட மிருந்து 2 செல்போன்களையும் கைப்பற்றினர்.

தடுப்புச் சுவரில்  கார் மோதி விபத்து 

அரியலூர், ஜூன் 16- ஜெயங்கொண்டம் அருகே  சாலையின் தடுப்புச் சுவரில்  கார் மோதி விபத்துக்குள்ளான தில் அதிர்ஷ்டவசமாக 13 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து  நன்னிலம் பகுதியில் நடைபெ றும் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்வதற்காக டவேரா காரில்  13 பேர் ஞாயிறன்று அதிகாலை  பயணம் செய்து கொண்டிருந்த னர். அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணியில் வந்த போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர பாலத்தின் தடுப்புச் சுவ ரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பலத்த காய மடைந்தனர். மற்ற அனை வரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்  தப்பினர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

இதுகுறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;