districts

img

பெரம்பலூர் பெண் மருத்துவருக்கு ‘மெரிட்டோரியஸ் சேவை’ விருது

பெரம்பலூர், அக்.23 - பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு மருத்துவ சேவைக்கான ‘மெரிட்டோரியஸ் சேவை’ விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இசிஜி அன்ட் எக்கோ கிளப்  சார்பில் ‘கிளினிகான் 2024’ மருத்துவத்  துறையில் சேவை புரிந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.  இதில் கிராமப்புற பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக மனிதநேயம் மற்றும் மருத்துவ சேவை புரிந்தமைக்காக பெரம்ப லூர் லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்கு நர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு மருத்துவ சேவைக்கான ‘மெரிட்டோரியஸ் சேவை’ விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற டாக்டர் ஜெயலட்சுமியை பெரம்பலூரைச் சேர்ந்த மருத்துவர்கள் வாழ்த்தினர்.