districts

img

தொழிலாளர்களை நேரில் சந்தித்த சங்கத் தலைவர்கள்

திண்டுக்கல், ஜுன் 28- 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழி லாளர்களுக்கு  சட்டக்கூலியாக ரூ.319 வழங்க வேண்டும். 200 நாட்கள் வேலை வழங்க  தமிழக அரசு முன்வர வேண்டும்.  சம்பளத்தை குறைத்து வழங்கும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வா கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் வலியுறுத்தியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்து வார்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழி லாளர்களை சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.   சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் மருதை  ஆகியோர் தொழி லாளர்களை சந்தித்து சம்பளம் குறித்தும், அவர்களிடம் கொடுக்கப் பட்ட பணிகள் குறித்தும் விசாரித்தனர். 

மலைக்கோட்டையில் ஒரு தனியார்  தோட்டத்தில் நிலத்திற்கு வரப்பு கட்டிக் கொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் கூறுகையில்,  24 நாட்கள் வேலை செய் திருக்கிறோம். 3 நாள் விடுமுறை. மீண்டும் இன்று வேலை செய்கிறோம். ஒரு  குழுவில் 20 பேர் வேலை செய்வ தாகவும், அதில் 17 பேர் தான் வேலை செய்வதாகவும் தெரிவித்தனர். இது போன்று இன்னும் சில தனியார் தோட்டங்களில் 5 குழுக்களாக பிரிந்து  வேலை செய்கிறார்கள் என்று தொழி லாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு இடத்திலும் 3 பேர் குறைவாக வேலை செய்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்தது. 

தனியார் தோட்டங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது

“இந்த ஊராட்சியில் வேலை செய்து  வரும் தொழிலாளர்களிடம் விசாரித்த  வகையில், 100 நாள் சட்ட விதிகளுக்கு மாறாக தனியார் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படு கிறார்கள். நிலத்திற்கு வரப்பு கட்டு வது, கல் பொறுக்குவது, பண்படுத்து வது போன்ற வேலைகள் வாங்கப்படு கிறது. முறையாக கிராமசபை கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படை யில் பணிகள் துவங்க வேண்டும். அனை த்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். தனியார் தோட்டங் களில் வேலை செய்து தருவதில் முறை கேடுகள் உள்ளன. இந்த முறைகேடு கள் களையப்பட வேண்டும். தனியார் தோட்டங்களில் வேலை செய்வதில் கூட சில குறிப்பிட்ட தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு வேலை வாங்கப்படுகிறது. இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். 

200 நாட்கள் வேலை வேண்டும். 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் ஆகியோரைப் பார்த்து பேசியுள் ளோம். தேர்தலுக்கு பிறகு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை யை நிறுத்தக்கூடாது என்று தொடர்ந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநில அரசை வலியுறுத்தி வரு கிறது. 100 நாட்கள் வேலை என்பதை  முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதி யாக 150 நாட்களாக உயர்த்துவோம் என  உறுதியளித்தார். 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். இந்த கூலி யையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்” என்று தலைவர்கள் தெரிவித்தனர்.

சட்டக்கூலி ரூ.319 வழங்குக!

“மாற்றுத்திறனாளிக்கு சம்பளமாக ரூ. 319 தருகிறார்கள். மற்ற பணியாளர் களுக்கு அதில் ரூ.60 வரை குறைத்து  சுமார் ரூ.260 தான் வழங்கி வரு கிறார்கள். இப்படி குறைத்து சம்பளம் வழங்கக்கூடாது.  ஊதியத்தைக் குறைத்தது சட்டவிரோதம்.  அப்படி குறைத்து சம்பளம் வழங்கும் ஊராட்சிகள் மீதும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மீதும் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர் பாக திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் முதல்வரையும் சந்தித்து பேச உள் ளோம்” என்று ஏ.லாசர் தெரிவித்தார்.  

சித்துவார்பட்டி ஊராட்சியில் முறைகேடுகள்

சித்துவார்பட்டி ஊராட்சி குறித்து சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கே.அருள்செல்வன் கூறுகையில், ‘வடமதுரை ஊராட்சி ஒன்றியம் சித்துவார்பட்டியில் ஊராட்சித்தலை வர் தலித் என்பதால் உதவித்தலை வரும், ஊராட்சி செயலாளரும் தலை வருக்குத் தெரியாமல் 100 நாள் வேலை  திட்டப் பணிகளை நிறைவேற்றுகிறார் கள். பொதுவாக இந்த திட்டத்தின் வேலை தொடர்பாக ஊராட்சித்தலை வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதற்கு பதிலாக வேலைகளை தீர்மானித்து தன்னிச்சையாக செயல்படுத்து கிறார்கள். மேலும் 100 நாள் வேலை  திட்டத்தில் ஊராட்சி பணித்தளப் பொறுப்பாளர் 100 நாள் கழித்து மாற்றப்பட வேண்டும். புதிய பணித் தளப் பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பணித்தளப் பொறுப் பாளர் மற்றும் ஊராட்சித்துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகி யோர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார் கள். அரசு விதிமுறைகளுக்கு மாறாக பணித்தளப் பொறுப்பாளர்களை தங்களுக்கு வேண்டியவர்களை நிய மித்துக்கொள்கிறார்கள். இந்த முறை கேடுகளுக்கு பணித்தள பொறுப்பா ளர்களும் உடந்தையாக இருக்கிறா ர்கள்” என்று புகார் தெரிவித்தார்.

 

;