districts

img

ஜிடிஎன் கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

திண்டுக்கல், ஜூன் 8- திண்டுக்கல் ஜி.டி.என். கலை அறி வியல் கல்லூரியில் சாதனையாளர் களுக்கு விருது வழங்கும் விழா செவ்வா யன்று நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி தாளாளர் கே.ரத்தினம், இயக்கு நர் ஆர். துரை ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சத்யராஜ் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.  நடிகர் சத்யராஜ் பேசுகையில், நான் எப்போதும் இளைஞர்களிடம் இருந்து  ஆலோசனை பெற வேண்டும் என்று  ஆசைப்படுபவன். பெரியவர்களிடமி ருந்து கற்றுக்கொள்வதற்கும், இளை ஞர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற் கும் நிறைய உள்ளன. இளைஞர்களா கிய நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும் என்றால் உடலும், உள்ள மும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாணவர்ளாகிய நீங்கள் அப்துல்கலாம் அய்யாவை படியுங்கள், தந்தை பெரியாரை படியுங்கள். அம்  பேத்கரை படியுங்கள், காரல் மார்க்சை  படியுங்கள். அதற்கு மேல் வேறு என்ன வேண்டியிருக்கிறது என்று பேசினார்.

;