districts

8 மணி நேர பணியை உறுதிப்படுத்தி, வேலைப்பளுவை குறைத்திடுக

தருமபுரி, ஜூலை 4- 8 மணி நேர பணியை உறுதிப்ப டுத்தி, தூய்மைப் பணியாளர்களின் வேலைப்பளுவை குறைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங் கிய மனுவை, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவரிடம் சிஐடியு தலைவர்கள் அளித்தனர். தருமபுரிக்கு வருகை தந்த தேசிய தூய்மைப் பணியாளர்கள் மற் றும் மறுவாழ்வு ஆணையத் தலை வர் எம்.வெங்கடேசனிடம், சிஐடியு  தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித்துறை தொழிலாளர் கள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித் தனர்.

அதில், அரசாணை 2டி எண் 62ன்  படி நகராட்சி, பேரூராட்சிகள் மற் றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய் மைப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் முறையே ரூ.710 ரூ.596.  ரூ.482. வழங்க வேண்டும். தூய்மைப்  பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க  வேண்டும். பிஎப், எல்ஐசி, இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்க ளில் தொழிலாளர்களை இணைக்க வும், இணைத்ததற்கான மற்றும் பணம் செலுத்தியதற்கான ரசீது களை வழங்க வேண்டும்.

மாதந்தோ றும் 1 ஆம் தேதி சம்பளம் வழங்கு வதை உறுதிசெய்ய வேண்டும். உணவு இடைவேளையுடன் கூடிய  8 மணி நேர பணியை உறுதிப்ப டுத்தி, வேலைப்பளுவை குறைக்க வேண்டும். தொழிலாளர்களின் தேவையின் அடிப்படையில் விடுப்பு  எடுக்க அனுமதிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு என்பது உள் ளது. சம ஊதிய சட்டம் 1976ன் படி ஆண் மற்றும் பெண் தினக்கூலி தூய் மைப் பணியாளர்களுக்கு சம ஊதி யம் வழங்கவும், அவரவர் வங்கிக்க ணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பணி யிடங்களின் எண்ணிக்கையை உரு வாக்கி, காலிப்பணியிடங்களை தொழிலாளர்களின் வேலைப் பளுவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி ஓய்வுபெறும் அன்றே தொழிலாளர்களுக்கு சேர  வேண்டிய அனைத்து பணப்பலன் களும் வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் தூய் மைப் பணியாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில்  தொழிலாளர்களின் நலன் சார்ந்த  கோரிக்கைகளை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், சிஐடியு மாவட்ட ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழி லாளர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், இணைச்செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகி குட்டியப்பன் ஆகி யோர் உடனிருந்தனர்.