districts

img

போராடியவர்கள் மீது தாக்குதல்

தருமபுரி, பிப்.25-

சென்னையில் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வரிடம் நேரடி யாக பெருந்திரள் முறையீடு செய்யும் போராட்டம் பிப்.19 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அப் போது, இப்போராட்டத்தில் பங்கேற் றோர் மீது மிக கொடூரமான முறையில் காவல்துறை தாக்குதலை தொடுத் தது. இதில் மாநிலப் பொருளாளர் மு. பாஸ்கரன், மாநில துணைத் தலை வர் மு.சீனிவாசன், தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் மற்றும் பெண் ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  இதனைக் கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர் கோ.பழனி யம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மக ளிர் துணைக்குழு மாவட்ட அமைப் பாளர் பி.எஸ்.இளவேணில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர்கள் ஏரா ளமானோர் பங்கேற்று ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.முருகப்பெருமாள் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல் வம், ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநி லச் செயலாளர் முருகேசன், திருநாவுக் கரசு, கலைவாணன் அந்தோணி உள் ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;