districts

img

உலக பிசியோதெரபி தினக் கருத்தரங்கம்

தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில், “உலக பிசியோதெரபி தினத்தை” முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு முடநீக்கியியல் துறை தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மத்தி யாஸ், முடநீக்கியியல் துறை மருத்துவர் கிஷோர், புனர்வாழ்வுத்துறை மருத்துவர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மூத்த பிசியோதெரபிஸ்ட் சுமதி வர வேற்றார்.  கருத்தரங்கை தொடங்கி வைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை பேசுகையில், “மருத்துவத் துறையில் பிசியோ தெரபிஸ்ட்களின் பங்கு மகத்தா னது. நோயாளிகள் தங்கள் இயல்பு  நிலைக்கு திரும்புவதில், பிசியோதெர பிஸ்ட்கள் சிறப்பான பங்கு வகிக்கின்றனர்.  விபத்து, அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாதம் வந்த வர்கள் பிசியோதெரபிஸ்ட்களின் பயிற்சி யால் தான் இயல்பு நிலைக்கு திரும்பு கின்றனர். நோயாளிகளை இயல்பு நிலைக்கு மீட்டு கொண்டு வரும் பிசியோ தெரபிஸ்ட் படிப்பை பயில்பவர்கள் அர்ப்ப ணிப்பு உணர்வும், மனிதநேயத்தோடும் செயலாற்ற வேண்டும்” என்றார்.  நிகழ்ச்சியில், பிசியோதெரபிஸ்டுகள் அம்பிகை, முருகேசன், தர்மேந்திர, அருண் சிவக்குமார், நிசார், கற்பகம், டெக்னீசி யன்கள் ரமேஷ், வெங்கடேசன், தேவேந்தி ரன், கவிதா மற்றும் மருத்துவத்துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை மருத்துவக் கல்லூரி யில் விழிப்புணர்வு ஊர்வலம் நடை பெற்றது.

;